Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 75-வது குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் தேசிய கொடியினை ஏற்றிவைத்தார்.


தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்ற 75-வது குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தி, காவல்துறையினரின் அணி வகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டு, சிறப்பாக பணியாற்றிய 341 அரசுத்துறை அலுவலர்கள், பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்களையும், பதக்கங்களையும், பல்வேறு துறைகளின் சார்பில் 25 பயனாளிகளுக்கு ரூ.3.28 இலட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்கள்.

தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 75-வது குடியரசு தினவிழா-2024 இன்று (26.01.2024) நடைபெற்றது. இந்த குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தி, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டார்கள். பின்னர், வண்ண பலூன்களை வானில் பறக்கவிட்டார்கள்.


இதனை தொடர்ந்து, காவல்துறையின் சார்பில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த 48 காவலர்களுக்கு 2024 -ஆம் ஆண்டிற்கான மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் காவலர் பதக்கங்களையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, மருத்துவ கல்வித்துறை, பொதுசுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து துறை, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, உணவு பாதுகாப்புத் துறை, ஆவின் துறை, வனத்துறை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், பள்ளி கல்வித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், செய்தி மக்கள் தொடர்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, வோளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கூட்டுறவுத் துறை, கால்நடை பாரமரிப்புத்துறை, மீன்வாளம் மற்றும் மீனவர் நலத் துறை, தோட்டகலைத் துறை, நெடுஞ்சாலைத்துறை, ஆவின், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம், பொதுப்பணித்துறை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை, நுகர்பொருள் வாணிபக்கழகம், தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம், மாவட்ட தொழில்மையம், நூலகத்துறை, நேரு யுக கேந்திரா, காவல்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நில அளவைத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆகிய துறை சார்ந்த மொத்தம் 341 நபர்களுக்கு நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் வழங்கினார்கள்.


மேலும், சிறந்த வட்டமாக காரிமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம், சிறந்த வட்டாரமாக பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகம், சிறந்த ஊராட்சியாக தித்தியோப்பனஅள்ளி ஊராட்சிமன்ற அலுவலகம், சிறந்த அரசு மருத்துவமனையாக பாலக்கோடு அரசு மருத்துவமனை, சிறந்த ஆரம்ப சுகாதார நிலையமாக கடத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சிறந்த அரசு பள்ளிகளாக நத்தமேடு அரசு மேல்நிலைப்பள்ளி, பங்குநத்தம் கொட்டாய் அரசு உயர்நிலைப்பள்ளி, எர்ரனஅள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஒடசல்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, சிறந்த காலை உணவு திட்ட மையமாக இருமத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, சிறந்த மகளிர் சுய உதவிக்குழுவாக வெள்ளோலை ஊராட்சி முருகா மகளிர் சுய உதவிக்குழு, சிறந்த பேரூராட்சியாக காரிமங்கலம் பேரூராட்சி, சிறந்த சத்துணவு மையமாக நல்லகுட்லஅள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சிறந்த அங்கன்வாடிமையமாக நல்லம்பள்ளி ஒன்றியம், டி.கணிகாரஅள்ளி அங்கன்வாடி மையம் மற்றும் சிறந்த நியாய விலைக்கடையாக அன்னசாகரம் கூட்டுறவு நியாய விலைக்கடையும் தேர்ந்தெடுக்கப்பட்டு இன்றைய தினம் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினார்கள்.


பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இளைஞர் நலன் மற்றம் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் 9 வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகளையும், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ. 75,000/- மதிப்பீட்டிலும், வருவாய்த்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.2.23 இலட்சம் மதிப்பீட்டிலும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.30,000 மதிப்பீட்டிலும் என மொத்தம் 25 பயனாளிகளுக்கு ரூ.3.28 இலட்சம் (ரூ.3,27,500) மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.


இன்று நடைபெற்ற 75-வது குடியரசுதின விழாவில் 31 சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்கள். மேலும், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் என் இந்தியா தேச பக்திப் பாடலும், உலகத்த தமிழர் பெருமைப்பாடல் - மொழி அற்புதம், ஒயிலாட்டம் - கிராமியக்குழு நடனம், தேச பக்தி பாடலுக்கான நடனம், கிராமத்து கலைகள் - இசை நடனம், செந்தமிழ் நாடெனும் பூமி - மொழிப்பாடல், சிலம்பம் மற்றும் தற்காப்புக்கலை நிகழ்வு என பள்ளி மாணவ, மாணவியர்கள் நிகழ்த்திய பல்வேறு கலைநிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் பார்வையிட்டு, பள்ளிகளுக்கு கேடயங்களையும் மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுசான்றிதழ்களையும் வழங்கினார்கள்.


இந்நிகழ்ச்சியில் பென்னாரகம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.கே.மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஷ்வரன், தருமபுரி முதன்மை மாவட்ட நீதிபதி திரு.ஆ.மணிமொழி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ந.ஸ்டீபன் ஜோசுபாதம், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.கௌரவ்குமார் இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தடங்கம் பெ.சுப்பிரமணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமதி.என்.பழனிதேவி, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.டி.ஆர்.கீதாராணி, அரூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.வில்சன் ராஜசேகர், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு. ப. ராஜகுரு, தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்புத்திட்டம் திரு.சையது ஹமீது, தருமபுரி நகரமன்ற தலைவர் திருமதி. மா.லட்சுமி, தருமபுரி வட்டாட்சியர் திரு.ஜெயசெல்வம் உட்பட அரசுத் துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாணவ, மாணவியர்கள், பயனாளிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies