Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் பாஜக தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள், 74 வது நாள் பாதயாத்திரை.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் என் மண், என் மக்கள், 74 வது நாள் பாதயாத்திரை இன்று 139 தொகுதியாக பாலக்கோட்டில் நடைப்பெற்று வருகிறது. தமிழ்நாட்டில் தர்மபுரி மாவட்டம் தொழில் வளர்ச்சி குறைந்த மாவட்டம், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இந்தியா முழுவதும் சென்று கடுமையான வேலை செய்து வருகின்றனர், இங்கு இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் சாதியை பிரதானமாக வைத்து அரசியல் செய்து கொண்டு வருகிறார்கள்.

பாரத பிரதமர் மோடி இளைஞர்சாதி, பெண்கள் சாதி  விவசாயிகள் சாதி, ஏழைசாதி  என்று 4 சாதியின் வளர்ச்சிக்காக  ஆட்சி செய்து வருகிறது, ஆனால் மற்ற அரசியல் கட்சியினர் சாதியை வைத்து அரசியல் செய்து வருகின்றனர். மோடி என்றால் நம்பிக்கை, வளர்ச்சி, பிரதமராக பதவி ஏற்ற கடந்த 9 ஆண்டுகளில் அனைத்து கிராமங்களிலும் வீடு, கழிப்பறை, குடிநீர்  வசதிகள் அடிப்படை கட்டமபைப்புகளை ஏற்படுத்தி உள்ளார்.

பெண்கள் முன்னேற்றம் இந்தியாவின் முன்னேற்றம் என்ற இலக்கை கொண்டு செயல்படுகிறார். எனவே வரும் 2024 எம்.பி. தேர்தலில் தர்மபுரி தொகுதியில்  பாஜக வெற்றி பெற்றால் தமிழகத்தின் முதன்மைத் மாவட்டமாக தர்மபுரி திகழும் என பேசினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட நல திட்ட பிரிவு துணைத் தலைவர் சிவா, நகர தலைவர் கணேசன், தொகுதி பொறுப்பாளர் சங்கீதா, மாவட்ட மீனவர் அணி தலைவர் மாதையன், மாநில  பொதுக்குழுஉறுப்பிணர் குணா, மேற்கு ஒன்றியதலைவர் சேட்டு உள்ளிட்ட  ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies