Type Here to Get Search Results !

தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் 6-வது தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி.


தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் 6-வது தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் சின்னம் மற்றும் தீம் பாடலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் வெளியிட்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.


தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தருமபுரி பிரிவின் சார்பில் 6-வது தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் சின்னம் மற்றும் தீம் பாடலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று (12.01.2024) வெளியிட்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தல் மற்றும் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையட்டு மே்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் நடவடிக்கை அடிப்படையில், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் 2023-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நடத்துவதற்கு தேவையான அனைத்து விழிப்புணர்வு நடவடிக்கைகள் தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 


கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் நாட்டிலுள்ள இளைஞர்களிடையே விளையாட்டு கலாச்சாரத்தை வளர்பதற்கும், விளையாட்டில் சிறந்து விளங்குவதற்கு நடத்தப்படுகின்ற ஒருங்கிணைந்த விளையாட்டு நிகழ்வாகும். இப்போட்டிகள் தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் வருகின்ற 19.01.2024 முதல் 31.01.2024 வரை நடத்திட முடிவு செய்யபட்டுள்ளது.


6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் 18 வயதிற்குட்பட்ட 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து நாடு முழுவதும் 5500-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் 26 + 1 ( Demo sports) வகையான போட்டிகள் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு முழுவதும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளின் செய்தியையும் உணர்வையும் பரப்பிட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் உரிய விழிப்புணர்வுகளை மேற்கொள்ளும் வகையில் விழிப்புணர்வு வாகனம் தயார் செய்யப்பட்டு இன்றைய தினம் நமது தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளது.


தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் இன்றைய தினம் (12.01.2024) நடைபெற்ற விழாவில் 6-வது தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப்போட்டிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் சின்னம் மற்றும் தீம் பாடலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்களால் வெளியிடப்பட்டு, நேரு யுக கேந்திராவின் சார்பில் சுவாமி விவேகானந்தர் அவர்களின் 161-வது பிறந்தநாளான இன்று, தேசிய இளைஞர் தின வார விழாவாக கடைபிடிக்கப்படுவதையொட்டி, சுவாமி விவேகானந்தர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.


மேலும், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் தொடர்பாக நடத்தப்பட்ட மாரத்தான், கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் வழங்கினார்கள். 


முன்னதாக, தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் 6-வது தேசிய கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் கொடியசைத்து, தொடங்கி வைத்து, விழிப்புணர்வு வாகனத்தினை பார்வையிட்டார்கள்.


இந்நிகழ்ச்சிகளில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.கே.மணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுபாதம், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.டி.ஆர்.கீதாராணி, மாவட்ட விளையாட்டு - இளைஞர்நலன் அலுவலர் திருமதி. தே. சாந்தி, தருமபுரி அரசு கலைக்கல்லூரி உடற்கல்வி இயக்குநர் திரு. பாலமுருகன், நேரு யுக கேந்திரா திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.வேல்முருகன், தருமபுரி அரசு கலைக்கல்லூரி முதல்வர் முனைவர். கோ.கண்ணன், தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.தாமோதரன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies