Type Here to Get Search Results !

மஞ்சப்பை விருது 2023-2024 விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு.


"மீண்டும் மஞ்சப்பை" பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், 2023-2024 நிதியாண்டுற்காக மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களால் சட்டப் பேரவையில் மஞ்சப்பை விருதுகள் அறிவிக்கப்பட்டது. 

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடையை திறம்பட செயல்படுத்தி, மாற்று பொருட்களான மஞ்சப்பை, பாக்குமட்டை, காகிதங்களால் ஆன கவர்கள் ஆகிய சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவித்து தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்களை தேர்வு செய்து இவ்விருதானது வழங்கப்படும்.


மாநில அளவில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடையை திறம்பட செயல்படுத்தி, பிளாஸ்டிக் இல்லாத வளாகத்தை உருவாக்கும் 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிக நிறுவனங்களுக்கு இந்த விருது வழங்கப்படும். மேலும் முதல் பரிசாக ரூ. 10 லட்சம், இரண்டாவது பரிசாக ரூ.5 லட்சம் மற்றும் மூன்றாவது பரிசாக ரூ.3 லட்சம் வழங்கப்படும்.


இவ்வறிப்பிணை தொடர்ந்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியமானது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தவிர்த்து சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை பயன்படுத்தும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்களை ஊக்குவிக்கும் பொருட்டு மஞ்சப்பை விருதினை வழங்க உள்ளது. இவ்விருத்திற்கான விண்ணப்ப படிவங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 


குறிப்பு : 

  1. விண்ணப்பத்துடன் இணைக்கப்படும் ஆவணங்களில் தனிநபர்/துறை தலைவர் கையொப்பமிட வேண்டும்.
  2. விண்ணப்பத்தின் இரண்டு பிரதிகள் மற்றும் மென்நகல்கள் (CD, Pendrive) மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், அதியமான்கோட்டை-ஒசூர் புறவழிச்சாலை, (டான் பாஸ்கோ கலை அறிவியல் கல்லூரி அருகில்) ஏ.ரெட்டிஅள்ளி கிராமம், தருமபுரி வட்டம், தருமபுரி மாவட்டம் – 636809 என்ற முகவரியில் சமர்ப்பிக்கவும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 01.05.2024 ஆகும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்கள். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies