இந்தியன் பில்லர்ஸ் அமைப்பின் தலைமையில் தர்மபுரி உணவு வங்கி அமைப்பில் இணைந்துள்ள 18 தன்னார்வ அமைப்புகள் இணைந்து இந் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது, நேற்று இந்தியன் பில்லர்ஸ், சீட்ஸ் தொண்டு நிறுவனம் இணைந்து நடத்திய மார்கழி திருவிழாவில் பாலக்கோடு புரட்சித்தலைவர் டாக்டர் எம். ஜி. ராமச்சந்திரன் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் பங்காரு அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேவாரம் குறித்து பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வில் தோழி கூட்டமைப்பின் தலைவரும், டீப்ஸ் தொண்டு நிறுவனத்தின் இயக்குனருமான சங்கர் அவர்கள் பேசும்பொழுது இந்திய ஜனநாயகத்தின் ஐந்தாவது தூணாக சமூக அமைப்புகள் உள்ளதின் காரணமாக ஏதாவது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் உடனடியாக களத்தில் இறங்கும் அமைப்புதான் சமூக அமைப்புகள் என எடுத்துரைத்தார். கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளி தலைமை ஆசிரியை மஞ்சுளா தேவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்தியன் பில்லர்ஸ் வினோத் தலைமை தாங்கிப் பேசும் பொழுது தமிழ்நாட்டில் குறிப்பிட்ட ஒரு சில இடங்களில் மட்டுமே நடைபெற்றுக் கொண்டிருந்த மார்கழி திருவிழா தற்பொழுது தர்மபுரியில் நடைபெறுவது அனைவருக்கும் பெருமைக்குரியது எனவும் இனி வருங்காலங்களில் தொடர்ந்து மார்கழி திருவிழா தர்மபுரியில் நடைபெறும் என கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கிறிஸ்ட் இந்தியா பவுண்டேஷன் தலைவர் பொம்மிடி முருகேசன், பி பி டி சி தொண்டு நிறுவன செயலாளர் காசிமணி, உலகப் பெண்கள் பேரவை தலைவி கலைவாணி, தர்மபுரி தூண்கள் அமைப்பின் தலைவர் ஓகே சுப்பிரமணி, தர்மபுரி பில்லர்ஸ் தலைவர் சோழ பாண்டியன், பசி இல்லாத தர்மபுரி தலைவர் வினோத், youtuber ராமன், வனவிலங்கு ஆர்வலர் ராம், பட்டிமன்ற பேச்சாளர் சௌந்தர பாண்டியன்,இலக்கு மக்கள் திட்ட கவுன்சிலர் ராஜகண்ணு உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
முன்னதாக நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு சிறப்பித்த கஸ்தூரிபா காந்தி பாலீகா வித்யாலயா உண்டு உறைவிட பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட சிறப்பித்த மாணவிகளுக்கு பாலக்கோடு புரட்சித்தலைவர் டாக்டர் எம் ஜி ராமச்சந்திரன் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் பங்காரு அவர்கள் பாராட்டு சான்று மற்றும் மெடல் வழங்கி கௌரவித்தார்.
சிறப்பாக நடனமாடிய மாணவிகளின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் திரைப்பட நடிகர் சௌந்தர்ராஜன் அவர்கள் ஐந்தாயிரம் ரூபாய் ஊக்கப் பரிசு வழங்கினார். முன்னதாக சீட்ஸ் தொண்டு நிறுவனத் தலைவர் சரவணன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். சி ஆர் டி எஸ் தொண்டு நிறுவன தலைவர் சிவக்குமார் அவர்கள் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்தியன் பில்லர்ஸ், தர்மபுரி உணவு வங்கி மற்றும் சீட்ஸ் தொண்டு நிறுவனம் செய்திருந்தது.