தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஏரியூர் ஒன்றியம் தின்னபெல்லூர் கிராமத்தில் ஏரியூர் திருக்குறள் பேரவையின் சார்பில் திருவள்ளுவர் தினத்தை சிறப்பிக்க வகையில் அவ்வூர் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து திருவள்ளுவர் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது, மேலும் அப்பகுதியில் வசிக்கும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக திருக்குறள் புத்தகம் மற்றும் எழுதுப்பொருட்கள் வழங்கப்பட்டது.
நிகழ்வில் ஏரியூர் திருக்குறள் பேரவை தலைவர் நா.நாகராஜ், பொருளாளர் த.சந்தோஷ்குமார், சமூக ஆர்வலர் மு.சரவணன் குபேரன், ஜெயபிராகாஷ், சேர்மன் பழனிசாமி, ஊர் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

