எனவே, இந்த கிராம சபை கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும், அனைத்து ஊராட்சி மன்ற உறுப்பினர்களும், ஊராட்சியிலுள்ள வாக்காளர்கள், பொதுமக்கள், மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் அதிக அளவில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
26.01.2024 - குடியரசு தினத்தன்று நடத்தப்பெற வேண்டிய கிராமச்சபை கூட்டங்களுக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய பொருள்கள் விவரம்: கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்து விவாதித்தல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம் (People's Plan Campaign) மூலம் 2024-25 ஆம் நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சித் திட்டம் குறித்து விவாதித்தல், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) குறித்து விவாதித்தல், ஜல் ஜீவன் இயக்கம் குறித்து விவாதித்தல், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம் குறித்து விவாதித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் – II குறித்து விவாதித்தல், பிரதான் மந்திரி ஜன்ஜாதி ஆதிவாசி நியாய அபியான் குறித்து விவாதித்தல், பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம் குறித்து விவாதித்தல், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் குறித்து விவாதித்தல், இதர பொருட்கள் குறித்து விவாதித்தல் உள்ளிட்ட பொருள்கள் வருகின்ற 26.01.2024 குடியரசு தினத்தன்று நடத்தப்பெற வேண்டிய கிராமச்சபை கூட்டங்களுக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.
.gif)

