Type Here to Get Search Results !

பிக்கல் நாயக்கனஅள்ளி கிராமத்தில் பன்றிக்கு வைத்த வெடியில் சிக்கி கறவை பசுமாடு சாவு.

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்துள்ள பிக்கநாயக்கனஅள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி கோவிந்தராஜன், இவர் கால்நடைகளை வளர்த்து வருகிறார். கோவிந்தராஜன் நேற்று காலை 9 மணிக்கு வழக்கம் போல் தனது 3 கறவை பசுமாடுகளை அதே பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்காக  கட்டிவிட்டு வீட்டிற்க்கு வந்தவர், மீண்டும் 11 மணிக்கு பசுமாடுகளுக்கு தண்ணீர் வைக்க சென்றுள்ளார்.

அப்போது இவரது கறவை பசுமாடுகளில் ஒன்று முகம் சிதறிய நிலையில்  இரத்தம் சொட்ட சொட்ட உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது, இதனை கண்டு அதிர்ச்சியடைந்தவர் மாரண்டஅள்ளியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். ஆனால் சிகிச்சை பலனின்றி கறவை பசுமாடு உயிரிழந்தது, கால்நடை மருத்துவர்கள் இறந்த கறவை பசுமாட்டை பிரேத பரிசோதனை செய்து விவசாய நிலத்தில் புதைத்தனர்.


தகவலறிந்த மகேந்திரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்க்கு சென்று ஆய்வு செய்ததில் பன்றிக்கு வைத்த வாய் வெடி, வெடித்ததில் கறவை பசுமாடு  உயிரிழக்க காரணம் என தெரிய வந்தது, இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வெடி வைத்த மர்ம நபரை தேடி வருகின்றனர். வெடி விபத்தில் சிக்கி கறவை பசுமாடு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies