தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா, ஹான்ஸ், மற்றும் கூல் லிப் போன்ற பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மீது அபராதம் மற்றும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும். தமிழ்நாடு அரசால், ஹான்ஸ், குட்கா, பான்மசாலா மற்றும் கூல் லிப், அல்லது இவற்றின் சுவை மற்றும் நறுமணம் கொண்ட உணவு வகைகள் அல்லது குட்கா, பான்மசாலா கலக்கப்பட்ட மற்றும் மென்று சாப்பிடக்கூடிய அனைத்து உணவு பொருட்கள் அல்லது புகையிலை மற்றும் நிக்கோட்டின் மூலப்பொருட்கள் போன்றவை உற்பத்தி, சேமிப்பு, போக்குவரத்து, விநியோகம் மற்றும் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.
எனவே தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட மேற்கண்ட உணவு பொருட்களை உற்பத்தி, சேமிப்பு, போக்குவரத்து, விநியோகம் மற்றும் விற்பனை செய்வோர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு அவர்களது கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும். மேற்கண்ட தவறை முதன்முறையாக செய்வோருக்கு ரூ.25000 அபராதம் விதிக்கப்பட்டு 15 நாட்களுக்கு கடையின் உரிமம் ரத்து செய்யப்படும். இரண்டாம் முறையாக செய்வோருக்கு ரூ.50000 அபராதம் விதிக்கப்பட்டு 30 நாட்களுக்கு கடையின் உரிமம் ரத்து செய்யப்படும். மூன்றாம் முறையாக செய்வோருக்கு ரூ.100000 அபராதம் விதிக்கப்பட்டு 90 நாட்களுக்கு கடையின் உரிமம் ரத்து செய்யப்படும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.
.gif)

.jpg)