Type Here to Get Search Results !

கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, தருமபுரி மாவட்ட இளைஞர்களுக்கான குழு விளையாட்டுப் போட்டிகள்-2023 வருகின்ற 13.01.2024 மற்றும் 14.01.2024 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.


தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தருமபுரி மாவட்ட விளையாட்டு பிரிவின் சார்பாக முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு தருமபுரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் மற்றும் இளைஞர்களுக்கான கபாடி, கையுந்துபந்து மற்றும் கால்பந்து விளையாட்டுப்போட்டிகள்   13.01.2024 அன்று பெண்களுக்கும்,  14.01.2024  அன்று ஆண்களுக்கும் காலை 9.00 மணி முதல் தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடத்தப்பட உள்ளது.

மேற்குறித்த  விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள 12.01.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் மாவட்ட விளையாட்டரங்கம், தருமபுரியில் தங்கள் அணியினை பதிவு செய்து கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும்  12.01.2024 - க்குள் பதிவு செய்யாத அணிகள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டாது.


தருமபுரி மாவட்டத்திலுள்ள 17 வயதிற்கு மேற்பட்ட தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் கலந்துகொள்ளலாம். மற்ற மாவட்ட வீரர்கள்/வீராங்கனைகள் அனுமதிக்கப்பட மாட்டாது. போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் வயது சான்றிதழ் மற்றும் ஆதார் கார்டு நகல் ஆகியவற்றை கண்டிப்பாக போட்டி நடைபெறும் இடத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

 

எனவே தருமபுரி மாவட்டத்திலுள்ள பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் விளையாட்டுத்திறனை மேம்படுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies