ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு, வினாடிக்கு 1500 கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகா அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து நீர்வரத்து தொடர்ந்து குறைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கர்நாடகா தமிழக எல்லைப் பகுதியான தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஓகனக்கல் பிலிகுண்டுளுவில் நேற்று வரை நீர்வரத்து வினாடிக்கு 500 கன அடியாக இருந்தன. இந்த நிலையில் இன்று காலை திடீரென ஆற்றில் வெள்ளம் அதிகரித்து வினாடிக்கு 1500 கன அடியாக நீடித்து வருகிறது.
இந்த நீர் வரத்தால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி, சினி ஃபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட கருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கின்றன. இதனால் சுற்றுலாப் பயணிகள் மெயின் அருவியில் குளித்தும் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.

