Type Here to Get Search Results !

முதுகம்பட்டி VIP கற்றதைக் கற்பிப்போம் குழுவினரின் முப்பெரும் விழா.


தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் கூக்குட்டமருதஅள்ளி ஊராட்சி முதுகம்பட்டி VIP கற்றதைக் கற்பிப்போம் குழுவினரின் முப்பெரும் விழா நடைப்பெற்றது. VIP கற்றதைக் கற்பிப்போம் குழுவின் சந்தோஷ் அவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் வரவேற்றார் இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியர் மா.பழனி அவர்கள் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.


இந்நிகழ்வில் ஓய்வு பெற்ற அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்,108 அவசர வாகன ஊர்தி ஓட்டுனர்,சாலை பணியாளர்களுக்கு பொன்துகில் மற்றும் கேடயம் வழங்கி கெளரவிக்கபட்டனர் . இதன் பின்னர் ஆதரவற்ற குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைப்பெற்றது. இந்நிகழ்வில் தமிழ்ச்செல்வி, தலைமை ஆசிரியை, மற்றும் ஊர் கவுண்டர் மாது, மந்திரி கவுண்டர் மகேந்திரன், ஊர் நாயுடு மாதையன் மற்றும் அப்பகுதியினை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் VIP கற்றதைக் கற்பிப்போம் குழுவினை சார்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்வின் இறுதியில் அப்பகுதியினை சார்ந்த பொதுமக்களுக்கு VIP கற்றதைக் கற்பிப்போம் அமைப்பின் சார்பில் இலவசமாக தினசரி நாள்காட்டி வழங்கப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies