Type Here to Get Search Results !

பாலக்கோடு பைபாஸ் சாலை ஆக்கிரமிப்புகள் நாளை அகற்றம், நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் அறிவிப்பு.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு புறவழிச்சாலையில், ஜெர்தலாவ் புறவழி பிரிவு சாலை முதல் 4 ரோடு மற்றும் தக்காளிமண்டி வரை சாலையின் இருபுறமும் நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து செயல்பட்டு வரும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், வீடுகள் உள்ளிட்டவைகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.

ஆக்கிரமிப்புக்களை அகற்றிகொள்ள பலமுறை நெடுஞ்சாலை துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டும் இதுவரை ஆக்கிரமிப்புக்களை அகற்றி கொள்ளாததால் நாளை 15ம் தேதி வெள்ளிக்கிழமை புறவழி பிரிவு சாலை முதல் தக்காளிமண்டி வரை உள்ள ஆக்கிரமிப்புக்கள் அகற்ற உள்ளதாக நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் நவீன் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies