Type Here to Get Search Results !

காரிமங்கலம் மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் காரிமங்கலம் மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர்கள்  வக்கீல்மணி, ராஜகுமாரி, மாவட்ட பொருளாளர் முருகன், முன்னாள் எம்எல்ஏ வெங்கடாசலம், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணன். வக்கீல் கோபால், அன்பழகன், பஞ்சபள்ளி அன்பழகன், முனியப்பன், நகர செயலாளர்கள் சீனிவாசன் முரளி, வெங்கடேசன் ஆகியோர்முன்னிலை வகித்தனர்.


இக்கூட்டத்தில் தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பழனியப்பன்  பங்கேற்று பஞ்சாயத்து வாரியாக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கியும், மேலும் சேலத்தில் நடக்கும் திமுக இளைஞரணி மாநாடு குறித்தும் அதில் திரளாக தொண்டர்கள்  பங்கேற்க வேண்டியது குறித்தும் பேசினார்.


கூட்டத்தில் சர்பு அணிகளின் அமைப்பாளர்கள் வக்கீல் சந்திரசேகர் , மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் முருகன், குமரன், பஞ்சாயத்து தலைவர்கள் ஆனந்தன், தீர்த்தகிரி, ஜெயலட்சுமி, பொதுக்குழு உறுப்பிணர் ஆப்பிள் பாபு, கவுன்சிலர்கள் கார்த்திகேயன், கீதா, முத்து, செல்வம், ரமேஷ், மாதப்பன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies