தர்மபுரி மாவட்டம் அரூரில் இன்று தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் அரூர் நகர இளைஞரணி சார்பில் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் பயன் பெறும் வகையில் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் அறிவுரையின் படி தளபதி விஜய் நூலகம் திறப்பு விழா அரூர் நகர இளைஞர் அணி தலைவர் மதலைமுத்து, தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட தலைவர் தாபா சிவா ,மாவட்ட இளைஞர் அணி தலைவர் விஜயகாந்த், மாவட்ட வர்த்தக அணி தலைவர் கார்த்திகேயன், புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பால் பெனடிக், ஆனந்த் என்டர்பிரைசஸ் நிறுவனர் ஆனந்த், புனித அன்னாள் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கோஸ் மாஸ், உள்ளிட்டோர் கலந்து கொண்டு நூலகத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றி இனிப்பு வழங்கினர்.
இதில் நகர வர்த்தக அணி தலைவர் மிதுன் ராஜ், ஒன்றிய, நகர, வர்த்தகர் அணி, மகளிர் அணி, மற்றும் இளைஞர் அணி, மாணவர் அணி, விவசாய அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.