தருமபுரி மாவட்டம் அரூரில் தீரன் சின்னமலை முழு உருவ வெண்கல சிலை திறப்பு விழா வரும் 10 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதன் முன்னோட்டமாக அரூரில் இன்று காலை 11 மணி அளவில் இருசக்கர வாகன பேரணி நடைபெற இருந்த நிலையில் இருசக்கர வாகன பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி கொடுக்காததால் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மாவட்ட கொங்கு வேளாளர் கவுண்டர் சங்கத்தினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து தலைவர் சந்திரசேகரன் தலைமையில் அரூர் திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரத்திற்கு மேலாக இருசக்கர வாகனங்களை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டு கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.. சாலை மறியலில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோரை காவல்துறை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர் இதனால் அப்பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு.