இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா வேண்டுதல், சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 579 மனுக்கள் வரப்பெற்றன.
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமெனவும், பொதுமக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அதற்கான தீர்வினை விரைந்து காண வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்தார்கள்.
முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தின் சார்பில் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு மரணமடைந்த தொழிலாளர்களின் வாரிசுதாரர்கள் 2 நபர்களுக்கு ரூ.7.05 இலட்சம் மதிப்பீட்டில் உதவித்தொகைகளையும், வருவாய்த்துறை சார்பில் கொத்தடிமைகளாக இருந்து விடுவிக்கப்பட்ட 2 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் வழங்கினார்கள்.
இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், தனித்துணை ஆட்சியர் (சபாதி) திரு.சையது ஹமீத், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) செல்வி.கு.மிரியாம் ரெஜினா, தொழிலாளர் உதவி ஆணையர் (சபாதி) திரு.முத்து, பழங்குடியினர் நல அலுவலர் திரு.பி.எஸ்.கண்ணன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
.gif)

