தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அடுத்து ஈச்சம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஈ.அக்ரஹாரம் கிராமத்தில் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் அவர்களின் பசுமை தேசம் இளைஞர் நற்பணி மன்றம் கடந்த நான்கு வருடங்களாக கிராம கிராமமாக சென்று அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குதல், தூய்மை பணி செய்வது, மரக்கன்றுகள் நடுதல், ஆதரவற்றோருக்கு உணவு வழங்குதல், போன்ற சமூக சேவை செய்து வருகிறது நற்பணி மன்றத்தை பாராட்டு விதமாக K.வெற்றி தொண்டு நிறுவனம் சார்பாக மாணவ மாணவிகளுக்கு வாலிபால், டென்னிஸ், கிரிக்கெட் மட்டை, செஸ் போர்டு, கேரம் போர்டு, போன்ற விளையாட்டு பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் K.வெற்றி தொண்டு நிறுவனர் திருமதி. கங்கா, திரு. சக்கரவர்த்தி இல்லம் தேடி கல்வி ஆசிரியர் வெ. கீர்த்தனா , மற்றும் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் பசுமை தேசம் இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகி நா. சின்னமணி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
.gif)

