தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையின் சார்பில் “சுற்றுலா வழிகாட்டிகள் (Tour Guides), சுற்றுலா பயணம் ஏற்பாட்டாளர்கள் (Tour Agents), சுற்றுலா முகவர்கள் (Travel Agents) மற்றும் சுற்றுலா போக்குவரத்து ஏற்பாட்டாளர்கள் (Tourist Transport Operators)” ஆகியவற்றை நடத்தும் நிறுவனங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளின்படி சுற்றுலாத்துறை இணையதளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து அரசாணைகளும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி தருமபுரி மாவட்டத்தில் செயல்படும் சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் சுற்றுலா பயணம் ஏற்பாடுச் செய்பவர்கள், சுற்றுலா முகவர்கள் மற்றும் சுற்றுலா போக்குவரத்து ஏற்பாட்டாளர்கள் நடத்தும் நிறுவனங்கள் சுற்றுலாத்துறை இணையதளமான https://www.tntourismtors.com – ல் உடனடியாக பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், விவரங்களுக்கு தருமபுரி சுற்றுலா அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 8939896398 / 04342-230705 மற்றும் மின் அஞ்சல் முகவரி: touristoffice.dpi@gmail.com உள்ளிடவற்றின் மூலம் தொடர்பு கொள்ளமாறு தெரிவிக்கப்படுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தியறிக்கையல் தெரிவித்துள்ளார்.
.gif)

.jpeg)