தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒருங்கிணைப்பில் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா தருமபுரி அரசு அவ்வையார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மின் ஆற்றல், மின்சிக்கனம், மின் பாதுகாப்பு,ஆகிய தலைப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கிடையே பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் (பொ) எஸ்.சரவணன், தலைமை வகித்தார், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் பெ.துரைராஜ் வரவேற்றார். முதன்மை கல்வி அலுவலர் ஐ.ஜோதிசந்திரா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ்கள், கேடயம் வழங்கி சிறப்புரையாற்றினர்.
மின்வாரிய உதவி செயற்பொறியாளர்கள் செந்தில் முருகன், ஹரிகரன், மலர்விழி பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஜோதிலட்சுமி, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் கூத்தப்பாடி மா.பழனி, ஆகியோர் வாழ்த்தி பேசினர், நிர்வாகிகள் ம.அருள்குமார், மிரா, மஞ்சு பிரியா, ஆகியோர் பங்கேற்று பேசினர். இந்நிகழ்ச்சியில் ஆசியர்கள் மாணவர்கள் பங்கேற்றனர்.