ஆங்கிலேயரை துணிச்சலுடன் எதிர்த்து போரிட்ட விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலை திருவுருவ சிலை ரூபாய் 50 லட்சம் மதிப்பில் தர்மபுரி மாவட்டம் அரூரில் நிறுவப்பட்டுள்ளது. வெண்கலத்தால் நிறுவப்பட்டுள்ள தீரன் சின்னமலை சிலையை உருவாக்கியுள்ள கொங்கு வேளாளர் கவுண்டர்கள் சங்கத்தினர் இந்த சிலையை முதல்வர் ஸ்டாலின் தான் திறந்து வைக்க வேண்டும் என்ற நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உடல்நிலை காரணமாக சிலை திறப்பு விழா ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் வருகின்ற டிசம்பர் 10ஆம் தேதி விடுதலைப் போராட்ட வீரர் தீரன்சின்னமலை சிலையை திறந்து வைத்து உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மற்றும் கேரள முன்னாள் ஆளுநருமான சதாசிவம், சிறப்புரை ஆற்றுகிறார். சிலை திறப்பு விழா குறித்து ஆலோசனைக் கூட்டம் தர்மபுரி மாவட்ட கொங்கு வேளாளர் கவுண்டர்கள் சங்க தலைவர் சந்திரசேகர் தலைமையில் அரூரில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அனைத்து சமூக மக்கள் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.