Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்ட படைப்பாளர் பதிப்பாளர் சங்கக் கூட்டம் நடைபெற்றது.


தருமபுரி மாவட்ட படைப்பாளர் பதிப்பாளர் சங்கக் கூட்டம் இன்று தருமபுரி முத்து இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத் தலைவர் நூலகர் சி சரவணன் தலைமை வகித்தார். தகடூர் புத்தகப் பேரவை தலைவர் திரு சிசுபாலன், தருமபுரி மாவட்ட தமிழ் கவிஞர் மன்றத் தலைவர் பாவலர் கோ. மலர்வண்ணன் முன்னிலை வகித்தனர்.

இந்தக் கூட்டத்தில், பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தர்மபுரி மாவட்ட படைப்பாளர்கள் சங்கமம் நிகழ்ச்சி நடத்துவது, எழுத்தாளர்களுக்கு பயிற்சிப் பட்டறை நடத்துவது, இளம் படைப்பாளர்களை உருவாக்க மாணவர்களுக்கு பயிற்சி அளித்தல், மாவட்ட படைப்பாளர்களின் தகவல் திரட்டு தயாரித்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக சங்க  செயலாளர் கூத்தப்பாடி மா.பழனி வரவேற்றார். இக்கூட்டத்தின் முடிவில் பொருளாளர் நெ.த.அறிவுடைநம்பி நன்றி கூறினார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies