Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

18.12.2023 முதல் 27.12.2023 வரை மாவட்டத்தின் 10 பேரூராட்சிகளில் ”மக்களுடன் முதல்வர்” முகாம் நடைபெறவுள்ளது.


தருமபுரி நகராட்சி, மதிகோண்பாளையம், KPJ திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளமக்களுடன் முதல்வர்  பொது மக்களிடமிருந்து மனுக்களை பெறும் முகாமிற்கான முன்னேற்பாட்டு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று (16.12.2023) ஆய்வு மேற்கொண்டார்கள்


இந்த ஆய்விற்கு பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கோயமுத்தூர் மாவட்டத்தில் இருந்து மக்களுடன் முதல்வர் எனும் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறும் சிறப்பு முகாமினை 18.12.2023 திங்கட்கிழமை அன்று தொடங்கி வைக்க உள்ளார்கள். இதனைத் தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர்  திட்டத்தில் பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்று 30 தினங்களுக்குள் தீர்வுகாண முதற்கட்டமாக  நகர்ப்புற பகுதிகளான தருமபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில்   18.12.2023 முதல் 27.12.2023 வரை கீழ்கண்ட இடங்களில் முகாம்கள்   காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை  நடத்தப்படுகிறது

.

இதில் இலவச வீட்டுமனை, அடுக்குமாடி குடியிருப்பு தொடர்பான மனுக்கள் தவிர்த்து  கீழ்கண்ட   13 துறைகளான மின்சார துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, கூட்டுறவு துறை, வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை, காவல் துறை, மாற்றுதிறனாளி நலத்துறை, சமூக நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சிறுதொழில்கள்  துறை, தொழிலாளர் நலத்துறை  தொடர்பான மனுக்களை பொதுமக்கள் தங்கள் பகுதி முகாம் நாளில் வழங்கி தீர்வு பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது. கிராம புறங்களுகென்று தனி முகாம்கள்  பின்னர் நடத்தப்படும். எனவே நகர் பகுதி மக்கள் மட்டும் இம்முகாம்களில் கலந்துகொள்ளவும்.


நாள்

நகராட்சி /பேரூராட்சி

முகாம் இடம்

18.12.2023

தருமபுரி நகராட்சி வார்டு (1,2,3,4,5,6)

KPJ திருமண மண்டபம் , மதிகோண்பாளையம்

பென்னாகரம் பேரூராட்சி

 

சமுதாய கூடம், பென்னாகரம் பேருந்து நிலையம்  அருகில், பென்னாகரம் 

பாலக்கோடு பேரூராட்சி

வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலை பள்ளி பாலக்கோடு

19.12.2023

தருமபுரி நகராட்சி வார்டு (7,8,9,17,18,19)

அபிராமி மஹால் கடைவீதி

மாரண்ட அள்ளி பேரூராட்சி

 

ஆனந்தமஹால் மாரண்ட அள்ளி

20.12.2023

தருமபுரி நகராட்சி வார்டு (10,11,12,13,14,15,16)

வன்னியர் திருமண மண்டபம் நான்கு ரோடு அருகில்

கம்பைநல்லூர் பேரூராட்சி

சமுதாய கூடம், கம்பைநல்லூர் 

21.12.2023

தருமபுரி நகராட்சி வார்டு (20,21,22,23,24,25,26)

வர்த்தகர் மஹால்,
எஸ்.வி ரோடு அருகில்

காரிமங்கலம்  பேரூராட்சி

துளசியம்மாள் திருமண மண்டபம்  காரிமங்கலம்

பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி

மல்லிகா பேலஸ் பாப்பிரெட்டிப்பட்டி

அரூர் பேரூராட்சி

பொன்கற்பகம் திருமண மண்டபம், அரூர்

22.12.2023

தருமபுரி நகராட்சி வார்டு (27,28,29)

செங்குந்தர் திருமண மண்டபம், நெசவாளர் காலனி

பாப்பாரப்பட்டி  பேரூராட்சி

செங்குந்தர் மண்டபம், பாப்பாரப்பட்டி

பொ.மல்லாபுரம் பேரூராட்சி

சமுதாயகூடம், பொ.மல்லாபுரம்

26.12.2023

தருமபுரி நகராட்சி வார்டு (30,31)

BBC திருமண மண்டபம், சாலை விநாயகர் ரோடு

27.12.2023

தருமபுரி நகராட்சி வார்டு (32,33)

செங்குந்தர் திருமண மண்டபம், அன்னாசாகரம்

கடத்தூர் பேரூராட்சி

 

மீனாட்சி மஹால்  மண்டபம், கடத்தூர்


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட உள்ள மக்களுடன் முதல்வர் திட்டத்திற்கான முகாம் நடைபெறவுள்ள இடங்களில் மனுக்கள் வழங்க வரும் பொதுமக்களுக்கான அத்தியாவசிய தேவைகளாக உள்ள குடிநீர், கழிப்பிட வசதி, இருக்கை வசதிகள் உள்ளிட்டவைகளை முறையாக மேற்கொள்ள வேண்டுமெனவும், மனுக்களை பதிவு செய்வதற்கு தேவையான கணினி, பிரிண்டர் உள்ளிட்ட வசதிகளை போதுமான அளவில் ஏற்படுத்திடவும் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது


மேலும் மனுக்கள் வழங்க வரும் மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கை மனுக்களை ஏவ்வித சீரமமும் இன்றி வழங்க ஏதுவாக சாய்தள வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக மேற்கொள் வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.



இதனைத் தொடர்ந்து தருமபுரி நகராட்சியின் சார்பில் ரூ.9.5 இலட்சம் மதிப்பீட்டில் தருமபுரி கடைவீதியில் இருந்து எ.கொள்ளஅள்ளி செல்லும் சாலையில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.


இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் திரு. செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தடங்கம்.பெ.சுப்பிரமணி, தருமபுரி நகர்மன்றத் தலைவர் திருமதி.இலட்சுமி நாட்டான் மாது, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.கீதாராணி, தனித்துணை ஆட்சியர் (சபாதி) திரு.சையது ஹமீத், உதவி இயக்குநர்பேரூராட்சிகள்) திரு..குருராஜன், தருமபுரி நகராட்சி ஆணையாளர் திரு.சோ.புவனேஷ்வரன், தருமபுரி வட்டாட்சியர் திரு.ஜெயசெல்வம் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884