தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தவுள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் பதவிகளுக்கான ஒருங்கிணைந்த TNPSC-GROUP-IV தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தருமபுரியில் 04.12.2023 திங்கட்கிழமை முதல் நடைபெற்று வருகிறது.
இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் இந்த https://tinyurl.com/2xmb4ts9 இணைப்பின் மூலம் தங்களை பதிவு செய்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறர்கள். மேலும் விவரங்களுக்கு இவ்வலுவலக தொலைபேசி எண் 04342–296188 வாயிலாக தொடர்பு கொள்ளலாம். இம்மாவட்டத்தில் தகுதிவாய்ந்த தேர்வர்கள் பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.
.gif)

