Type Here to Get Search Results !

பாலக்கோடு அருகே பூர்கலான் கொட்டாயில் விநாயகர் ஊர் மாரியம்மன் கோவில் மகாகும்பாபிஷேகம் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே  உள்ள பூர்கலான் கொட்டாய் கிராமத்தில் அருள்மிகு ஶ்ரீ விநாயகர் மற்றும் ஸ்ரீ ஊர் மாரியம்மன் திருக்கோவில் புனரமைக்கப்பட்டு திருநெறி தீந்தமிழ் திருக்குட நன்னீராட்டுப் பெருஞ்சாந்திப் மகா கும்பாபிஷேக பெருவிழா நடைப்பெற்றது. 


இந்த விழா கடந்த 13ம் தேதி புதன்கிழமை கொடியேற்றி கணபதி பூஜையுடன் தொடங்கியது.  முக்கிய நாளான இன்று அதிகாலை திருப்பள்ளியெழுச்சி, மங்கள இசை, திருச்சுற்றுக் கலச நீராட்டு,  ஆனைந்தாட்டல், காப்பணிவித்தல், நான்காம் கால வேள்வி, பேரொளி வழிபாடு, பூர்ணாஹநிதி நடந்தது. 


இதனையடுத்து யாகசாலையிலிருந்து புனித நீர் கலச தீர்த்தத்தை பட்டாச்சியர்கள், ஊர் கவுண்டர் சுப்ரமணி, மந்திரிகவுண்டர் கோவிந்தன், பேளாரஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் மாரியப்பன் மற்றும்  ஊர் முக்கியஸ்தர்கள்   தங்கள் தலைமீது எடுத்து சென்று  கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் திருக்குட நன்னீராட்டு செய்து தீபாரதனை காட்டினார். 


பின்னர்  கலசத்திற்கு ஊற்றிய புனித நீர்  பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதனையடுத்து ஸ்ரீ விநாயகர் , ஸ்ரீ ஊர் மாரியம்மனுக்கு பல்வேறு திரவியங்களால்  அபிஷேகங்கள் செய்யப்பட்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு  மகா தீபாரதனை காட்டப்பட்டது.


ஸ்ரீ விநாயகர் மற்றும் ஸ்ரீ ஊர் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில்  பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்தவிழாவையொட்டி  காலை முதல் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 


இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழாகுழுவினர் செய்திருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies