Type Here to Get Search Results !

ஜோதிஅள்ளி கிராமத்தில் 49 இலட்சத்து 98 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைப்பெற்றது.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம், பி.செட்டிஹள்ளி ஊராட்சியில் உள்ள  ஜோதி அள்ளி கிராமத்தில்  49 இலட்சத்து 98 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் தார்  சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்யும் நிகழ்ச்சி பி . செட்டி அள்ளி ஊராட்சி மன்ற தலைவர் கணபதி தலைமையில் நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு அதிமுக ஒன்றிய செயலாளர்கள் வக்கில் செந்தில், கோபால், நகர செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர்  கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு பூமி பூஜை செய்து  அடிக்கல் நாட்டி பணிகளை  துவக்கி வைத்தார்.


இந்த நிகழ்ச்சியில் சர்க்கரை ஆலை இயக்குநர் மாது,  கூட்டுறவு சங்க தலைவர்கள் வீரமணி, புதுர் சுப்ரமணி, வார்டு உறுப்பிணர்கள் பூபதி, திருநாவுக்கரசு, மகேந்திரன், ஊராட்சி செயலாளர் கோவிந்தன், அதிமுக தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் திராளக கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies