Type Here to Get Search Results !

காரிமங்கலத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல்.


தர்மபுரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆலோசனைப்படி, உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல் துறை இணைந்து  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும்  உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மேற்பார்வையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள் அடங்கிய ஏழு குழுக்கள் உருவாக்கப்பட்டு தினம் தோறும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் மளிகைக் கடைகள், பெட்டிக்கடைகள், பீடா கடைகள், ஹைவே டீ கடைகள் மற்றும் தாபா உள்ளிட்டவைகளுடன் முக்கியமாக பள்ளி, கல்லூரி அருகில் மூழு கவனத்துடன் செயல்பட்டு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் நடமாட்டத்தை அறவே இல்லாமல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. 

கடந்த ஒரு வாரமாக மாவட்டம் முழுவதும் ஆய்வுகள் , அபராதம் மற்றும்  கடை  செயல்பட தடை  உள்ளிட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்றைய தினம் காரிமங்கலம் ஒன்றியத்தில், காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் யுயல் மூர்த்தி உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்தபோது காரிமங்கலம் ராமசாமி கோயில் அருகில் ஒரு மளிகை கடை, பஸ் நிலையத்தில்  ஒரு பேன்சி வளையல் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கண்டெடுத்து பறிமுதல் செய்யப்பட்டது.  


மேலும் இதே போல் ஜிட்டாண்டள்ளியில் ஒரு மளிகை கடையிலும்  புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி கடைகளை மாவட்ட நியமன அலுவலர் உத்தரவின் பெயரில் கடைகள் மூடி கடை செயல் பட தடை விதித்து நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் இரண்டு கடைகளுக்கு தலா ஐயாயிரம் மற்றும் பத்தாயிரம் என மொத்தம் ரூபாய் 15 ஆயிரம் உடனடி அபராதம் விதிக்கப்பட்டது. இரண்டு தினங்களுக்கு முன்பு மாட்லாம்பட்டி மற்றும்  பாலக்கோடு பகுதியில் இரண்டு கடைகளுக்கு நியமன அலுவலர் தலைமையில் கடைகள் மூடி நோட்டீஸ் வழங்கப்பட்டு மறு உத்தரவு வரும் வரை கடை திறக்க கூடாது என எச்சரித்து  குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies