தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்துள்ள திம்மம்பட்டியில் உள்ள செயின்ட் லூசிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் சார்பில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு எய்ட்ஸ் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை பள்ளி வளாகத்தில் இருந்து பள்ளியின் முதல்வர் அருட்சகோதரிரோஸ்லின், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
அதனை தொடந்து விழிப்புணர்வு பேரணியானது பைபாஸ் சாலை, 4 ரோடு, தக்காளி மார்க்கெட், தாசில்தார் அலுவலகம் பஸ் நிலையம், ஸ்தூபி மைதானம், காவல் நிலையம் வழியாக மீண்டும் பள்ளியை சென்றடைந்தது. இப்பேரணியில் மனைவியை மட்டும் நேசி எய்ட்ஸ் வருமா யோசி, ஒழிப்போம் ஒழிப்போம் எய்ட்சை ஒழிப்போம், எய்ட்ஸ் இல்லா உலகை படைப்போம், மற்றும் எய்ட்ஸ் பாதிப்புக்கள் குறித்த பதாகைகளை கையில் ஏந்தியபடி கோஷமிட்டு ஊர்வலமாக சென்றனர்.
இப்பேரணியில் போக்குவரத்து காவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பிணர் தென்னரசு, மாணவர்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.
.gif)

