இந்நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலர் இராஜகுரு அவர்கள் கலந்து கொண்டு குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தை தொடங்கி வைத்தார். பின்பு பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே பேசும்போது நாம் வாங்கும் பொருள்களின் தரம் எவ்வாறு இருக்க வேண்டும் பொருள்களை வாங்கும் போது கவனிக்க வேண்டியவை பொருள்களில் கலப்படம் இருந்தால் அதை யாரிடம் புகார் தெரிவிப்பது ஒரு நுகர்வோராக நுகர்வோரின் பொறுப்புகள் கடமைகள் என்ன என்பது பற்றியும் சிறுதானிய உணவுகள் இன்றைய காலகட்டத்தில் எவ்வாறு தேவையாக உள்ளது என்பது பற்றி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட நுகர்வோர் சங்க பொறுப்பாளர் A.G. ஜாய், தமிழ்நாடு பாண்டிச்சேரி நுகர்வோர் கூட்டமைப்பு தலைவர் சம்பத்குமார், நுகர்வோர் சங்க செயலாளர் பெரியசாமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜலட்சுமி, உறுப்பினர்கள் கார்த்திக் அருண்குமார் முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் மா. பழனி இதற்கான ஏற்பாடுகளை செய்து வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் கல்பனா, திலகவதி ரேகா, ராஜேஸ்வரி மற்றும் மாணவர்கள் பொதுமக்கள் சத்துணவு பணியாளர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
.gif)

