இந்த ஆர்ப்பாட்டத்திற்க்கு முஸ்லிம் மெஹதவியார் ஜமாத் செயலாளர் அர்மான் நவாப் ஜான், திமுக மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் இதாயத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டண உரையில் கிருஷ்ணகிரி எஸ்.டி.பி.ஐ கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் ஜாவித் , வேலூர் மண்டல செயலாளர் ஷேக் அலாவூதின், விடுதலை சிறுத்தை கட்சியின் மாநில துணை செயலாளர் ராசகோபால் ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 31 ஆண்டுகளாக பாபர் மசூதியை இடித்து மாபெரும் அநீதியை ஏற் படுத்தி உள்ளது. பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தண்டனை வழங்க வேண்டும். மீண்டும் அதே இடத்தில் பாபர் மசூதியை ஒன்றிய அரசு கட்டித் தர வேண்டும். பாபர் மசூதி இடித்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 63 பேர்கள் மீதும் சட்டரீதியான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ, வி.சி.க, திமுக உள்ளிட்ட கட்சியை சேர்ந்த திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.