ஜக்கசமுத்திரம், ஜிட்டாண்டஅள்ளி சுற்று வட்டார பகுதியில் நாளை மின் நிறுத்தம், ஜக்கசமுத்திரம் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் அறிவிப்பு. தர்மபுரி மாவட்டம் ஜக்கசமுத்திரம் துணை மின்நிலைய உதவி செயற்பொறியாளர் மோகன்குமார் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, மாதந்திர பராமரிப்பு பணிக்காக ஜக்கசமுத்திரம் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட ஜக்கசமுத்திரம், சூடப்பட்டி, ஜிட்டாண்டஅள்ளி, மதகிரி, சிக்கமாரண்டஅள்ளி, மல்லுப்பட்டி, மகேந்திரமங்கலம், காடுசெட்டிப்பட்டி, தப்பை ஆகிய பகுதிகளில் இன்று 7ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.