Type Here to Get Search Results !

பாப்பாரப்பட்டி அருகே வாகன சோதனையில் பிடிபட்ட ஒரு கிலோ கஞ்சா; கஞ்சா கடத்தியவர் கைது.


தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடு‌த்த பாப்பாரப்பட்டி அருகே உள்ள மாமரத்துப்பள்ளம் என்ற இடத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமாக வந்த நபரை நிறுத்தி சோதனை செய்ததில் பையில் கஞ்சா பதுக்கியிருந்தது தெரியவந்தது, இதனை தொடர்ந்து நடத்திய விசாரணையில் கஞ்சா கடத்திய நபர் பிக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த முனியப்பன் மகன் மணிகண்டன்(31) என்பது தெரியவந்தது, இதனையடுத்து முனியப்பனை கைது செய்து ஒரு கிலோ கஞ்சா, மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் விசாரணை மேற்கொண்டதில் தான் கஞ்சா வியாபாரம் செய்வதாகவும் கஞ்சா பட்டாலத்தை சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே வாங்கி வந்ததாகவும் கூறினான் பின்னர் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies