தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பாப்பாரப்பட்டி அருகே உள்ள கீழ் கொள்ளுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன் இவர் பெங்களூருவில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார் இந்நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான கீழ் கொள்ளு பட்டியில் உள்ள வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததாக உறவினர்கள் சிலம்பரசனுக்கு தகவல் கொடுத்தனர் அங்கு வந்து பார்த்த சிலம்பரசன் தனது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்து பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு உள்ளிருந்த சுமார் 8பவுன் தங்க நகை திருடு போயிருந்தது தெரியவந்தது.
உடனடியாக பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் இன்று பாப்பாரப்பட்டி காவல்துறையினர் திருமால்வாடி என்னும் இடத்தில் வாகனம் தணிக்கில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான ஒருவரை சோதனை செய்ததில் முன்னுக்கு பின் முரணான தகவலை அளித்தார் பின்னர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் கிருஷ்ணன் மகன் சுந்தரவேல் 45 என தெரிய வந்தது கடந்த 10 தினங்களுக்கு முன்பு கீழ் கொள்ளு பட்டியில் சுமார் 8 பவுன் நகை திருடியது ஒப்புக்கொண்டான் மீண்டும் திருட வந்ததாக கூறினான்.
இந்நிலையில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர் இவன் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
.gif)

