அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றனர்.
அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பயிலும் மாணவர்கள் வாலிபால் போட்டியில் சரக அளவில் மற்றும் மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர் இதையடுத்து திருச்சியில் 40 மாநிலங்கள் பங்கேற்கும் வாலிபால் போட்டியில் பங்கேற்க உடற்கல்வி இயக்குநர் சங்கர் தலைமையில் செல்லும் மாணவர்களுக்கு தேவையான உபகரனங்கள் வழங்கி வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுகம் உடற்கல்வி ஆசிரியர்கள் முருகேசன் பழனிதுரை வெங்கடாசலம் ஸ்ரீஅம்மன் கிரானைட்ஸ் பூபதி மற்றும் இருபால் ஆசிரியர்கள் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.
.gif)

