மக்களுடன் முதல்வர் திட்டத்தை தமிழக முதல்வர் மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்கள் கோவையில் துவக்கி வைத்ததை அடுத்து தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பேரூராட்சியில் திட்டத்தை பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி அவர்கள் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், டிஎஸ்பி மகாலட்சுமி, பென்னாகரம் வட்டாட்சியர் சவுகத் அலி, வட்டார வளர்ச்சி அலுவலர் கல்பனா, பேரூராட்சி தலைவர் வீரமணி, பேரூராட்சி செயல் அலுவலர் கீதா, மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இதில் 13 துறை அதிகாரிகள் பங்கு பெற்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக