”மின்னணு வாக்குப்பதிவு இயந்திர செயல் விளக்க மையத்தினை” மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்கள் முன்னிலையில் திறந்து வைத்தார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 18 டிசம்பர், 2023

”மின்னணு வாக்குப்பதிவு இயந்திர செயல் விளக்க மையத்தினை” மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்கள் முன்னிலையில் திறந்து வைத்தார்.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ”மின்னணு வாக்குப்பதிவு இயந்திர செயல் விளக்க மையத்தினை” மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்கள் முன்னிலையில் இன்று திறந்து வைத்தார்கள்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ”மின்னணு வாக்குப் பதிவு இயந்திர செயல் விளக்க மையத்தினை” மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்கள்/வாக்காளர்கள் முன்னிலையில் இன்று (18.12.2023) திறந்து வைத்து, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் மாதிரி வாக்குப்பதிவினையும் மேற்கொண்டார்கள்.


இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையின் படி, எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தல்-2024-ன் ஒரு பகுதியாக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்படும் முறை குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘மின்னணு வாக்குப் பதிவு இயந்திர செயல் விளக்க மையத்தினை” மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திறந்து வைத்தார்கள்.


மேலும், தருமபுரி மாவட்டத்தில் ”மின்னணு வாக்குப்பதிவு இயந்திர செயல்முறை விளக்க மையமானது” மாவட்ட ஆட்சியரகத்திலும், 057-பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்திலும், 058-பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்திலும், 059- தருமபுரி சட்டமன்ற தொகுதிக்கு தருமபுரி வாக்காளர் பதிவு அலுவலர்  மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், 060-பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்திலும், 061-அரூர் (தனி) சட்டமன்ற தொகுதிக்கு அரூர் வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் இன்று (18.12.2023) முதல் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் வரை தொடர்ந்து செயல்பட உள்ளது.

 

பொதுமக்களுக்கு/வாக்காளர்களுக்கு இவ்வியந்திரம் செயல்படும் முறை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் விரிவாக விளக்கி கூறப்பட்டதோடு, பொதுமக்களிடம் ஏவரேனும் ஒருவரை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மாதிரி வாக்குப்பதிவினை மேற்கொண்டு, அந்நபர் வாக்களித்த சின்னம் தான் VVPAT கருவியில் காண்பிக்கப்படுகிறதா? என்பதை உறுபடுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தினார்கள். பொதுமக்கள்/ வாக்காளர்கள் தருமபுரி மாவட்டத்தில் மேற்குறிப்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் அலுவலக நேரங்களில் சென்று மாதிரி வாக்குப்பதிவினை மேற்கொள்ளலாம்.


இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் (தேர்தல்கள்) திரு.அசோக்குமார் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad

-->