தர்மபுரி மாவட்டம் பென்னாகரம், அடுத்த பாப்பாரப்பட்டி மின் வாரிய அலுவலகத்தில் கழிப்பறைக்குச் சென்று விட்டு திரும்பிய போது கீழே விழுந்த மின் கணக்கீட்டாளர் உயிரிழந்தார்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தண்டுகாரனஹள்ளி வெள்ளிச்சந்தை பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் மகன் முருகன் (49). இவர் பாப்பாரப்பட்டி துணை மின்வாரிய அலுவலகத்தில் மின் கணக்கீட்டாளராக பணியாற்றி வருகிறார்.
திங்கள்கிழமை வழக்கம் போல் அலுவலகத்திற்கு வந்த முருகன் கழிப்பறைக்குச் சென்று விட்டு, திரும்பி வரும்போது திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார். இதனை கண்ட சக பணியாளர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அங்கு வந்த மருத்துவப் பணியாளர்கள் முருகனை பரிசோதனை செய்த பிறகு இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து பாப்பாரப்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக