Type Here to Get Search Results !

மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் குழந்தைகளுக்கு மேலங்கி வழங்கிய மை தருமபுரி அமைப்பினர்


தருமபுரி பள்ளிக் கல்வித்துறை சார்பாக மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உலக மாற்றுத்திறனாளி தின விழா திங்கட்கிழமை அன்று தருமபுரி நகராட்சி பள்ளியில் கொண்டாடப்பட்டது. 


இந்த விழாவில் கலந்து கொண்ட 50 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மை தருமபுரி அமைப்பின் சார்பாக மேலங்கி, பைகள், கல்வி உபகரணங்கள் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ஜோதி சந்திரா அவர்கள் தலைமை தாங்கினார், மாற்றுத்திறனாளி பள்ளி ஆசிரியர் மோகனப்பிரியா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். 


மை தருமபுரி அமைப்பின் சார்பாக சதீஸ் குமார் ராஜா, தமிழ்ச்செல்வன், அருணாசலம், முஹம்மத் ஜாபர், சந்திரசேகர், அருள்மணி, விஜயகாந்த் ராகவ் திலக், ஜனனி சத்தியநாதன், அம்பிகா, மங்கை, ரம்யா ஆகியோர் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு மேலங்கி வழங்கினர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies