Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்கம் சார்பில் தருமபுரி நகரில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா; தருமபுரி MLA வெங்கடேஸ்வரன் பங்கேற்பு.


தருமபுரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்கம் சார்பில் தருமபுரி நகரில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழாவானது கேக் வெட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புற கொண்டாடப்பட்டது.


இந்நிகழ்விற்கு தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் S.P.வெங்கடேஷ்வரன் தலைமை தாங்கினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி, தருமபுரி சமூக சேவை சங்க இயக்குநர் அருட்பணி. மரியப்பன், உதவும் உள்ளங்கள் தலைவர் அரிமா. மாணிக்கம், நிர்வாகி பிரபாகரன் மாணிக்கம்,  தகடூர் மாதர் சங்க தலைவி அவ்வை. சந்திரா ஆதிமூலம், புலவர் கோவிந்தராசு, தமிழக மாற்றுத்திறனாளி சங்க கூட்டமைப்பின் மாநில துணை தலைவர் துரைராஜ், பாரா ஒலிம்பிக் சங்க தலைவர் சரவணன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் ஓய்வு பெற்ற நிர்வாகி பாலசுப்ரமணியம், மாவட்ட வன்னியர் சங்க நிர்வாகி பாலகிருஷ்ணன், சின்னசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பார்களாக மருதம் நெல்லி குழுமத்தின் இயக்குநர் கோவிந்த், சி.கே.எம். சிட்ஸ் இயக்குநர் இரமேஷ், ரோட்டரி மிட் டவுன் கிளப்பின் தலைவர் இளவரசன், செயலர் கிருஷ்ணமூர்த்தி,  பொருளர் சங்கர், மேனாள் தலைவர் சரவணன், சேவா பாரதி அமைப்பின் தமிழ்செல்வி,  ஆகியோர் கலந்து கொண்டனர்.


முன்னதாக மாவட்ட மாற்றுத்திறனாளி நல்வாழ்வு சங்க தலைவர் வெங்கடேசன் வந்திருந்தோரை வரவேற்றார். நிகழ்ச்சியின் நிறைவாக நல்வாழ்வு சங்க பொருளரும் பசியில்லா தருமபுரி அமைப்பின் நிறுவனருமான வினோத்குமார் நன்றி கூறினார். நல்வாழ்வு சங்க செயலர் கோவிந்தராஜ் வந்திருந்தோரை ஒருங்கிணைத்தார். ஆசிரியர் சௌந்திர பாண்டியன் நிகழ்ச்சி தொகுப்பு செய்திருந்தார்.


மேலும் தகடூர் நற்பணி மன்ற தலைவர் பிறைசூடன், சேலம் Beleive ட்ரஸ்ட் தலைவர் குமார், பத்திரிகையாளர் பொம்மிடி முருகேசன், தருமபுரி மாவட்ட சமூக சேவை சங்க ஒருங்கிணைப்பாளர் சரண்யா, ஆசிரியர் தமிழ்வாணி, தெய்வானை வினோத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மூன்றாம் ஆண்டாக இந்நலத்திட்ட நிகழ்வு இவ்வமைப்பின் சார்பில் நடைபெற்று வருகிறது. இவ்வமைப்பை சேர்ந்த சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


120  மாற்றுத்திறனாளிகளுக்கு ஆடை மற்றும் போர்வையும், பவர் தையல் இயந்திரம், வாக்கிங் ஸ்டிக் போன்ற உபகரணங்கள் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து மதிய உணவு வழங்கப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies