அதன் ஒரு பகுதியாக பாலக்கோட்டில் பஸ் நிலையம் பகுதியில் ஒரு கடை மற்றும் பைபாஸ் ரோடு பெட்ரோல் பங்க் அருகில் காவப்பட்டியில் ஒரு பீடா கடை என இரண்டு கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
மேற்படி கடைகார்களுக்கு மேல் நடவடிக்கைக்காக பாலக்கோடு துணை காவல் கண்காணிப்பாளர் வழிகாட்டுதல்படி, காவல் ஆய்வாளர் பரிந்துரையின் பேரில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா, எம்.பி.,பி.எஸ்., உத்தரவின் படி காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் காரிமங்கலம் காவல் நிலைய காவலர் நரேந்திரன், பாலக்கோடு மகளிர் காவல் நிலைய காவலர் தேவி உள்ளிட்டோர் ஒருங்கிணைந்து மேற்படி கடைகள் இயங்க தடை விதித்த தாக்கீது உத்தரவு நகலை கடைக்காரர்களுக்கு வழங்கியும் , கடை கதவிலும் ஒட்டப்பட்டது. கடை உரிமையாளரக்கு ஐந்தாயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

