Type Here to Get Search Results !

பாலக்கோடு ஒன்றியம், எர்ரனஅள்ளி ஊராட்சி பி.கொல்லஅள்ளியில் 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 10 ஆயிரம் லிட்டர்‌ கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி கட்ட பூமி பூஜை.


பாலக்கோடு ஒன்றியம், எர்ரனஅள்ளி ஊராட்சி பி.கொல்லஅள்ளியில் 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 10 ஆயிரம் லிட்டர்‌ கொள்ளளவு கொண்ட  நீர்த்தேக்க தொட்டி கட்ட பூமி பூஜை.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம், எர்ரனஅள்ளி ஊராட்சி பி.கொல்லஅள்ளி சாலை, இருசன் கொட்டாய், துப்பாக்கி காரன் கொட்டாய் உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குடிநீர் பிரச்சனையை தீர்க்கும் வகையில், ஒன்றிய பொது நிதியிலிருந்து 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயை ஒதுக்கீடு செய்ததை அடுத்து பி.கொல்லஅள்ளி கிராமத்தில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான  பூமி பூஜை ஒன்றிய கவுன்சிலர் அழகு சிங்கம் தலைமையில் நடைப்பெற்றது.


நிகழ்ச்சிக்கு திமுக பாலக்கோடு மத்திய ஒன்றிய செயலாளர் முனியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பிணர் வெங்கடாசலம், ஊராட்சி மன்றதலைவர் வளர்மதி சின்னவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான பணிக்கு ஒன்றிய கவுன்சிலர் அழகு சிங்கம் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளர் சண்முகம், ரவி, ஜிகிரியா, குமார், மாரிமுத்து, பழனி, ஆறுமுகம் ஆஞ்சநேயன், கார்த்தி குமார், வாசு, மாதன், தம்பிதுரை, முனுசாமி, மணி, சுப்ரமணி, சின்ன குட்டி மற்றும் வார்டு உறுப்பிணர்கள், பாலக்கோடு கவுன்சிலர்கள் சரவணன், மோகன் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies