தருமபுரி மாவட்டம் அரூர் காவல் கோட்டத்திற்குட்பட்ட பகுதியில் தீவிர புகையிலை மற்றும் போதைப் பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றது. அரூர் டிஎஸ்பி ஜெகன்நாதன் உத்தரவின் பேரில் அனைத்து காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் மற்றும் தனிப்படையினர் கடந்த சில நாட்களாக தீவிர வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று அரூர் நகர்ப் பகுதியில் ஹான்ஸ் உள்ளிட்ட பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் மேல்பாட்ஷா பேட்டை புது மஜீத் தெருவைச் சேர்ந்த சின்னசாமி மகன் குமார்(35) என்பவரது இடத்தில் பதுக்கி வைத்திருந்த 16 கிலோ ஹான்ஸ், பான் மசாலா, மற்றும் புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து பொருட்களை பதுக்கி வைத்திருந்த குமாரை கைது செய்தனர்