தர்மபுரி மாவட்டம் அரூர் பேருந்து நிலையம் முன்பு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 7ம் ஆண்டு நினைவு தினம் நகர செயலாளர் பாபு(எ) அறிவழகன் ஏற்பாட்டில் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஆர்.பசுபதி தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தினர் முன்னதாக பேருந்து நிலையத்தில் உள்ள எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் பொன்மலர்பசுபதி மாவட்ட துணை செயலாளர் செண்பகம், சந்தோஷ், பாஷா, சிவன், பழனிமுருகன், குணசியாரகுநாத், அன்பரசு, பேரூராட்சி உறுப்பினர்கள் கலைவாணன், பூபதி, காதர்பாஷா, மகளிரணி வசந்தி, தேவகி, பர்வீன், ஷோபனா, ஜெயா, மேகலா, கனகா, செந்தாமரை, ரம்யா, ராணி, சாந்தி, மலர், செல்லைசீனு, நேதாஜி, செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.