Type Here to Get Search Results !

ஏழ்மையில் இறந்த மூதாட்டியை நல்லடக்கம் செய்த மை தருமபுரி அமைப்பினர்.


கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட களர்பதி கிராமத்தில் மல்லிகா என்ற மூதாட்டி ஏழ்மை நிலையில் வாழ்ந்து வந்துள்ளார். வயது முதிர்ந்த காரணத்தினால் உடல் நலம் சரியில்லாமல் இயற்கை எய்தினார். இவரது மகள் ஈரோட்டில் ஏழ்மை நிலையில் வசித்து வருகிறார். இவரது உடலை நல்லடக்கம் செய்ய மை தருமபுரி அமைப்பினரிடம் கேட்டனர். 

மத்தூர் காவல் நிலைய காவலர் ராமசாமி, மை தருமபுரி அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் சமூக சேவகர் அருணாசலம், மை தருமபுரி நிறுவனர் சதீஸ் குமார் ராஜா ஆகியோர் இணைந்து இறுதி அஞ்சலி செலுத்தி அவரது உடலை நல்லடக்கம் செய்தனர். மை தருமபுரி அமைப்பின் மூலம் இதுவரை 71 புனித உடல்களை நல்லடக்கம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies