Type Here to Get Search Results !

பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு அதிமுக ஒன்றிய நகர கழகம் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 7ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு.


தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு அதிமுக ஒன்றிய நகர கழகம் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 7ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நகர கழக செயலாளர் ராஜா தலைமையில் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் ஒன்றிய செயலாளர் ரங்கநாதன்,  தெற்கு ஒன்றிய செயலாளர்கள் கோபால், முன்னாள் நகர செயலாளர் சங்கர், எம்.ஜி. மன்ற செயலாளர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இதையடுத்து பஸ் நிலையத்தின் முன்பு வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். முன்னதாக புரட்சி தலைவர், எம்.ஜி.ஆர், புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்களின் வெங்கல திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


இந்நிகழ்ச்சியில்  கூட்டுறவு சங்க தலைவர் வீரமணி, நகர இணை செயலாளர் இலட்சுமிகொளந்தை,   முன்னாள் நகர துணை செயலாளர் கண்னையன், தகவல் தொழில்நுட்ப மாவட்ட இணை செயலாளர் கிரிநாத், கவுன்சிலர் குருமணி, தகவல் தொழில்நுட்ப நிர்வாகி அசோக், பூக்கடை ஆறுமுகம், டீக்கடை பிரகாஷ், கிளை கழக செயலாளர்கள் , மேலவை பிரதிநிதிகள், கட்சி முன்னோடிகள், ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள்.பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies