Type Here to Get Search Results !

மாரண்டஅள்ளி தனியார் திருமண மண்டபத்தில் திமுக மேற்கு மாவட்ட வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்.


தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி தனியார் மண்டபத்தில் திமுக மேற்கு மாவட்ட  வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் பேரூர் கழக செயலாளர்கள் பி.கே.முரளி, எம்.ஏ.வெங்கடேசன் தலைமையில் நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாநில  தகவல் நுட்ப துணைசெயலாளர் மற்றும் பாலக்கோடு சட்ட மன்ற தொகுதி பொறுப்பாளர்  தமிழ் மாறன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக தர்மபுரி மாவட்ட திமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள்  உயர் கல்விதுறை அமைச்சர் முனைவர் பழனியப்பன் அவர்கள் கலந்து கொண்டு வாக்கு சாவடி முகவர்களுக்கு வாக்காளர்களின்  விண்ணப்பங்களில்  குடும்ப உறுப்பிணர்கள் விபரம், அரசிடம் இருந்து பெறும் நலதிட்ட உதவிகளின்  விபரம் உள்ளிட்டவைகள் எவ்வாறு பூர்த்தி செய்வது என்பது குறித்து புரஜெக்டர் திரையின் மூலம் விளக்கமளித்தார்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் வக்கில் மணி, மாவட்ட பொருளாளர் முருகன், மாநில விவசாய அணி துணைத் தலைவர் சுப்ரமணி, ஒன்றிய செயலாளர்கள் முனியப்பன், அன்பழகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பிணர் வெங்கடாசலம், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஹரிபிரசாத் மற்றும் பூத் கமிட்டி  வாக்கு சாவடி முகவர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள், பேரூர் கழக பொறுப்பாளர்கள்  கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies