Type Here to Get Search Results !

கடத்தூர் அருகே வாலிபர் சாவில் சந்தேகம்; ஆர்.டி.ஒ. முன்னிலையில் உடல் தோண்டி எடுத்து சுடுகாட்டில் பரிசோதனை.


தர்மபுரி மாவட்டம் கடத்தூர் யூனியனுக்கு  உட்பட்ட தாதனூர் கிராமத்தை சேர்ந்தவர் இன்பரசன், பாரதி இவர்களது மகன் சுகன் வயது (22) இன்பரசன் கடந்த சில ஆண்டுக்கு முன் இறந்துவிட்ட நிலையில் பாரதி மகனுடன் கோயம்புத்தூர் பெரியநாயக்கன்பாளையத்தில் தங்கி கூலிவேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. 

சுகன் வேலை செய்த இடத்தில் 18 வயது பூர்த்தி அடையாத சிறுமியை காதலித்து வந்ததாகவும் கடந்த நவம்பர் மாதம் தன்னுடைய தாய் பாரதியின்  கிராமமான ஊத்துபள்ளத்திற்க்கு சிறுமியை அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மாணவியின் பெற்றோர் புகார் அளித்ததின் பெயரில் கோவை மாவட்ட போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து வாலிபர் சுகனை தேடி வந்த நிலையில் தர்மபுரி மாவட்ட காவல்துறையின் உதவியுடன் சுகன் மற்றும் அவருடன் வந்த சிறுமியையும் கண்டறிந்து சிறுமியை பெற்றோருடன் கோவைக்கு அனுப்பி வைத்து விட்டதாக கூறப்படுகிறது. 


இதனால் வழக்கிற்கு பயந்து சுகன் தற்கொலை செய்து கொள்ள பூச்சி மருந்தை குடித்து உயிருக்கு போராடிய நிலையில் தாய் பாரதி கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லும் வழியில் இறந்த நிலையில் பாரதி  ஊத்துப் பள்ளத்திற்கு சுகனின் உடலை கொண்டுவந்துள்ளார்.


இதை அறிந்த தாதனூர் கிராமத்தைச் சார்ந்த சுகனின் உறவுக்காரர்கள், தாத்தா, பாட்டி பேரன் உடல் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தகராறு செய்து உடலை தாதனூர் கிராமத்திற்கு எடுத்து வந்து கடந்த  8.11.2023 தேதி தாதனூர் சுடுகாட்டில் புதைத்துள்ளனர். இறந்த சுகனுக்கு இறப்புச் சான்றிதழ் வேண்டி சுகனின் தந்தை வழி தாத்தா வி.ஏ.ஒ.ஜெயசுதாவிடம் அணுகிய போது  வாலிபர் சுகனின் மரணத்தில் சந்தேகம் அடைந்து  கோபிநாதம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். 


இதையடுத்து  நேற்று அரூர் ஆர்டிஓ வில்சன் ராஜசேகரன்  முன்னிலையில்  பினம் தோண்டி சுடுகாட்டில் தர்மபுரி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் அரவிந்தன், ஹரிஹரன் ஆகியே யோர். பிரேத பரிசோதனை  செய்யப்பட்டது. வட்டாசியர்  வள்ளி, இன்ஸ்பெக்டர் மஞ்சுளா, மற்றும் போலீசார், வருவாய்துறையினர் உடனிருந்தனர்.  இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies