Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு பரமபத சொர்க்கவாசல் திறப்பு விழா இன்று நடைப்பெற்றது.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கம்மாளர் தெருவில் கரிவரதராஜ பெருமாள் திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீவெங்கடரமணா சுவாமிக்கு வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு அதிகாலை முதலே  பல்வேறு திரவியங்களால்  அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார், மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யான உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது. பகல்பத்து. ராபத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும். 


இன்று ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். இதனையொட்டி அதிகாலை 3 மணிக்கு பரமபத சொர்க்கவாசல் திறக்கப்பட்டதையடுத்து, நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு  அதிகாலை 4 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் சுவாமி  எழுந்தருளினார்.


திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சீனிவாச, வெங்கட்டரமனா, கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டவாறு சாமி தரிசனம் செய்தார். அதனையொட்டி நாளை மாலை துவாதசி உத்சவ மூர்த்தி திருவீதி உலா நடைப்பெறும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 


இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் விழா குழுவினர், அர்ச்சகர் பரந்தாமன்ஐயர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies