Type Here to Get Search Results !

18ஆம் தேதி அன்று தர்மபுரியில் பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம்.


18ஆம் தேதி அன்று தர்மபுரியில் பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது, இதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கும் வகையில் கட்சியின் கௌரவத் தலைவர் மற்றும் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி தலைமையில் பென்னாகரம் மற்றும் பாப்பாரப்பட்டியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

அப்போது ஜிகே மணி பேசியதாவது காவிரி உபநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி கட்சியின் தலைவர் பலமுறை தமிழக அரசுக்கு வலியுறுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் அது மட்டுமின்றி நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையிலும் கால்நடை குடிநீர் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் இத்திட்டத்தை செயல்படுத்த அனைவரும் அவருடன் கைகோர்த்து போராடுவோம் இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தந்து வரும் பதினெட்டாம் தேதி அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கட்சி உறுப்பினர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் வேண்டுகோள் விடுத்தார்.


இந்த கூட்டத்தில் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் மாவட்ட தலைவர் செல்வகுமார் மாநில பொதுக்குழு உறுப்பினர் சுதா கிருஷ்ணன் உள்பட கட்சி உறுப்பினர்கள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies