Type Here to Get Search Results !

ஆதரவற்ற நபரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தி நல்லடக்கம் செய்த மை தருமபுரி தன்னார்வலர்கள்.


கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே அட்டகுறுக்கி கிராமத்தில் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஆறு மாத காலமாக யாசகம் பெற்று அங்கேயே வாழ்ந்து வந்துள்ளார். கடந்த மாதம் சாலையை கடக்கும் போது விபத்து ஏற்பட்டு காயமடைந்துள்ளார், சிகிச்சைக்காக இவரை தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 


சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், அவரை பற்றி காவல்துறையினர் விசாரித்ததில் உறவினர்கள் யாரும் இல்லை என்கிற தகவல் கிடைத்தது, இதனையடுத்து இறந்தவரின் உடலை சூளகிரி காவல் நிலைய காவலர் சரவணன், மை தருமபுரி அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் சமூக சேவகர் அருணாசலம், சந்திரசேகரன், விஜயகாந்த் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 70 புனித உடல்களை நல்லடக்கம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies